• Apr 03 2025

பிடியாணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த பொலிசார்- குழப்பம் விளைவித்தமையால் மேலும் இருவர் கைது!

Tamil nila / Dec 9th 2024, 6:44 pm
image

வவுனியாவில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டிருந்தது.

வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட  நபர் ஒருவர் அந்த வீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிசார் அவரை மடக்கிப்பிடித்தனர். இதன் போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதேவேளை குறித்த நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டபோது அந்தபகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

பிடியாணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த பொலிசார்- குழப்பம் விளைவித்தமையால் மேலும் இருவர் கைது வவுனியாவில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டிருந்தது.வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட  நபர் ஒருவர் அந்த வீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிசார் அவரை மடக்கிப்பிடித்தனர். இதன் போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதேவேளை குறித்த நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டபோது அந்தபகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement