• Apr 02 2025

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு - வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

Chithra / Nov 13th 2024, 11:29 am
image


களுத்துறை - பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குங்கமுவ பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை, குங்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 890 கிராம் வெடி மருந்து, 21 கிலோ 830 கிராம் அம்மோனியம் நைட்ரேட், 50 டெட்டனேட்டர்கள் மற்றும் 04 வோட்டர் ஜெல் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு - வெடிபொருட்களுடன் ஒருவர் கைது களுத்துறை - பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குங்கமுவ பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் களுத்துறை, குங்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபரிடமிருந்து 890 கிராம் வெடி மருந்து, 21 கிலோ 830 கிராம் அம்மோனியம் நைட்ரேட், 50 டெட்டனேட்டர்கள் மற்றும் 04 வோட்டர் ஜெல் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement