• Dec 28 2024

அம்பாறையில் வயல் வெளியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்; பொலிஸார் முற்றுகை..!

Sharmi / Dec 27th 2024, 9:36 am
image

நீண்ட காலமாக  இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்  கண்டுபிடிக்கபட்டதுடன் கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மல்வத்தை  தம்பி நாயகபுரம் பகுதியில் உள்ள  வயல்வெளியில் நேற்று முன்தினம்(25) அதிகாலை  சம்மாந்துறை பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீண்டகாலமாக  சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் மற்றும் குறித்த நிலையத்தை  நடாத்தி சென்ற  31 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகுதி கசிப்பு, கோடா, கேஸ் சிலிண்டர் 1, கேஸ் அடுப்பு 1, 20 லீட்டர் கொள்கலன் 2, டங்கர் 1, இரும்பு பரள் 1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.  

குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



அம்பாறையில் வயல் வெளியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்; பொலிஸார் முற்றுகை. நீண்ட காலமாக  இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்  கண்டுபிடிக்கபட்டதுடன் கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மல்வத்தை  தம்பி நாயகபுரம் பகுதியில் உள்ள  வயல்வெளியில் நேற்று முன்தினம்(25) அதிகாலை  சம்மாந்துறை பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் போது நீண்டகாலமாக  சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் மற்றும் குறித்த நிலையத்தை  நடாத்தி சென்ற  31 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகுதி கசிப்பு, கோடா, கேஸ் சிலிண்டர் 1, கேஸ் அடுப்பு 1, 20 லீட்டர் கொள்கலன் 2, டங்கர் 1, இரும்பு பரள் 1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.  குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement