• Sep 20 2024

ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திருடி வந்த கும்பல்- பொலிஸார் விசாரனை! samugammedia

Tamil nila / Jun 16th 2023, 6:48 pm
image

Advertisement

பிரான்சில், ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயைத் திருடும் கும்பல் ஒன்றை பொலிஸார் பிடித்துள்ளார்கள். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.

ஒரு காலத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய், பயன்படுத்தப்பட்டபின் உபயோகமற்ற பொருளாக எண்ணப்பட்டது. இப்போதோ, அதை திருடுவதற்கென பெரிய கொள்ளைக் கும்பல்களே உள்ளன.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரான்சின் Centre-Val-de-Loire பகுதியில் 52 எண்ணெய்த்திருட்டு சம்பவங்கள் நிகழ்துள்ளன. 385 டன் எண்ணெய் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 460,000 யூரோக்களுக்கும் அதிகமாகும்.

மேலும் பிரான்ஸ் பொலிஸார் இப்படி பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைத் திருடி பதப்படுத்துவதற்காக நெதர்லாந்துக்கு அனுப்புவதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றைக் கைது செய்துள்ளார்கள்.முன்பு ஹோட்டல்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்பின் வீண் என கருதப்பட்ட எண்ணெய், இப்போது முக்கியமான ஒரு பொருளாகியுள்ளது. காரணம், அதை இப்போது எரிபொருளாக (biodiesel) மாற்றி பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய சமையல் எண்ணெயை வடிகட்டி, மெத்தனாலுடன் சேர்த்து டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். கச்சா எண்ணெய் விலை அதிகமாக காணப்படுவதால், இப்போது இப்படி ஒரு தொழிலை துவங்கியுள்ளன.

ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திருடி வந்த கும்பல்- பொலிஸார் விசாரனை samugammedia பிரான்சில், ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயைத் திருடும் கும்பல் ஒன்றை பொலிஸார் பிடித்துள்ளார்கள். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.ஒரு காலத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய், பயன்படுத்தப்பட்டபின் உபயோகமற்ற பொருளாக எண்ணப்பட்டது. இப்போதோ, அதை திருடுவதற்கென பெரிய கொள்ளைக் கும்பல்களே உள்ளன.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரான்சின் Centre-Val-de-Loire பகுதியில் 52 எண்ணெய்த்திருட்டு சம்பவங்கள் நிகழ்துள்ளன. 385 டன் எண்ணெய் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 460,000 யூரோக்களுக்கும் அதிகமாகும்.மேலும் பிரான்ஸ் பொலிஸார் இப்படி பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைத் திருடி பதப்படுத்துவதற்காக நெதர்லாந்துக்கு அனுப்புவதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றைக் கைது செய்துள்ளார்கள்.முன்பு ஹோட்டல்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்பின் வீண் என கருதப்பட்ட எண்ணெய், இப்போது முக்கியமான ஒரு பொருளாகியுள்ளது. காரணம், அதை இப்போது எரிபொருளாக (biodiesel) மாற்றி பயன்படுத்துகிறார்கள்.இத்தகைய சமையல் எண்ணெயை வடிகட்டி, மெத்தனாலுடன் சேர்த்து டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். கச்சா எண்ணெய் விலை அதிகமாக காணப்படுவதால், இப்போது இப்படி ஒரு தொழிலை துவங்கியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement