• Nov 12 2025

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

Chithra / Oct 8th 2025, 8:46 am
image

 

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார், காரை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இருப்பினும், உத்தரவை மீறி கார் பயணித்துள்ளது. 

அப்போது, பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

நிற்காமல் சென்ற  கார், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காரில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு  மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார், காரை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இருப்பினும், உத்தரவை மீறி கார் பயணித்துள்ளது. அப்போது, பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நிற்காமல் சென்ற  கார், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement