• Jan 28 2025

பொலிஸாரின் விசேட நடவடிக்கை; 12 நாட்களில் 249 சந்தேகநபர்கள் கைது..!

Sharmi / Jan 27th 2025, 11:36 am
image

நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 12 நாட்களுக்குள் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 249 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 2025 ஜனவரி 12 அன்று விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 4020 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது ​​277,572 நபர்களையும் 104,844 வாகனங்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையானது கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வீடு உடைப்புகளை தடுப்பதிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்த பொலிஸார், விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான குற்றச்செயல்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர். 

பொலிஸாரின் விசேட நடவடிக்கை; 12 நாட்களில் 249 சந்தேகநபர்கள் கைது. நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 12 நாட்களுக்குள் குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 249 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில், 2025 ஜனவரி 12 அன்று விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 4020 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த நடவடிக்கையின் போது ​​277,572 நபர்களையும் 104,844 வாகனங்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வீடு உடைப்புகளை தடுப்பதிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்த பொலிஸார், விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான குற்றச்செயல்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement