• Jan 24 2025

வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த புது நடவடிக்கை!

Chithra / Dec 1st 2024, 12:00 pm
image

 

வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் கையாளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

கடந்த 2 நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, அவற்றைத் திருத்தியமைக்கும் வரையில் குறித்த விளக்குகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டினை போக்குவரத்து பொலிஸாரைக் கொண்டு முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா  அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த புது நடவடிக்கை  வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் கையாளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த 2 நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றைத் திருத்தியமைக்கும் வரையில் குறித்த விளக்குகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டினை போக்குவரத்து பொலிஸாரைக் கொண்டு முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா  அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement