• Nov 22 2024

பேருந்துகளில் சிவில் உடை அணிந்து கடமையில் ஈடுபடும் பொலிஸார் - சிக்கிய கும்பல்

Chithra / Feb 8th 2024, 9:38 am
image

 

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பொது போக்குவரத்து சேவையில் சிறுவர்கள், பெண்கள் மீது பல்வேறு பாலியல் சேட்டையில் ஈடுபட்ட 18 சந்தேக நபர்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு,

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொது போக்குவரத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்,

மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையிலும் அதிக முன்னுரிமை அளித்து சிவில் உடை அணிந்த பல பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

பேருந்துகளில் சிவில் உடை அணிந்து கடமையில் ஈடுபடும் பொலிஸார் - சிக்கிய கும்பல்  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் பொது போக்குவரத்து சேவையில் சிறுவர்கள், பெண்கள் மீது பல்வேறு பாலியல் சேட்டையில் ஈடுபட்ட 18 சந்தேக நபர்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு,பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.பொது போக்குவரத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்,மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையிலும் அதிக முன்னுரிமை அளித்து சிவில் உடை அணிந்த பல பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement