• Sep 20 2024

தேர்தலூடாகவே கொள்கை ரீதியான மாற்றங்களும் சட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும்- அகிலன் வேண்டுகோள்! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 6:29 pm
image

Advertisement

தேர்தலூடாகவே கொள்கை ரீதியான மாற்றங்களும் சட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உபதலைவர் அகிலன்  கதிர்காமர் தெரிவித்துள்ளார்

இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் வருமானமானது தற்போது அதிகரிக்கவில்லை எனினும் செலவுகள் இரு மடங்காகியுள்ளன.. உலக உணவுத் திட்ட புள்ளிவிபரத்தின் படி நாற்கூலி செய்பவர்களின் வருமானம் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது.

நாட்டில் அரசியல் நெருக்கடியுமுள்ளது. போர் வீரர் என்று கூறிய  கோட்டபாயா நாட்டைவிட்டு ஓடினாலும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களே ஜனாதிபதியை கொண்டுவந்தனர். தம்மை நியாயப்படுத்த முடியாததால் சட்ட மாற்றம் கொள்கை மாற்றத்தை கொண்டுவருகின்றனர்.

இதனால்  மக்கள் பெரிதும் பாதிக்ப்படுகின்றனர்.  இதைவிட எமது அரசியல் உரிமை போன்ற  அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தி மக்களைச் சுரண்டும நிலையுள்ளது.  ஆகவே அந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

உழைக்கும் மக்களின் ஓய்வூதியமாக இருக்கும் ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதிய வட்டிவீதத்தை எதிர்வரும் காலத்தில்  குறைக்கவுள்ளதாக வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளனர்.

இது தோட்டத் தொழிலாளர்கள் முதல் பல்கலைக்கழக ஊழியர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.

ஒருவர் 10 வருடம் வேலை செய்து ஓய்வுபெறும் பட்சத்தில் கடன் மறுசீரமைப்பு நிலை.தொடருமாயின்  பெறும் ஓய்வூதியத் தொகையில் 30 சதவீத பண இழப்பு ஏற்படும் நிலையுள்ளது.

எத்தனையோ தனியார் முதலாளிகள் முதலிட்ட முதலீடுகளில் கடன் மறு சீரமைப்பை மேற்கொள்ளாமல் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றில் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் நியாயமற்ற பாராளுமன்றத்தை பயன்படுத்தி நாட்டையே வித்தியாசமான நிலைக்குட்படுத்தும் நிலையுள்ளது. அரசாங்கம் ஜனநாயகமற்ற நிலையிலுள்ள நிலையி்ல் ஏனைய நிறுவனங்களும் ஏதேட்சையான ஜனநாயகமற்ற நிலையிலேயுள்ளன.

இது அரசியல் , பொருளாதார , சட்ட அடக்குமுறை என்றே கருதலாம். எதிர்வரும் காலங்களில் வரும் பாரிய மாற்றங்கள் முற்போக்கானவையா பிற்போக்கானவையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க  வேண்டும். இவ்வாறு சென்றால் பாசிச நிலைக்குள்ளே செல்லும். இந் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பாரிய எதி்ப்பை இதுவரை தெரிவிகாதது கவலையளிக்கும் விடயம்.

நாம் இவற்றிற்கான தீர்வு சர்வதேசத்திடமிருந்து தீர்வு வருமென எதிர்பார்த்தாலும் மாறாக தீர்வு மக்களிடமே உள்ளது.  கடன் மறுசீரமைப்பை கூட சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன. 

தேர்தலூடாக ஜனநாயக மாற்றத்தின் பின்னரே கொள்கை ரீதியான மாற்றங்களாயினும்  சட்டங்களாயினும் கொண்டுவரப்பட வேண்டும்.

எது எவ்வாறாயினும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டங்களை அடக்கும் நோக்கிலேயே  அரசாங்கம் முனைப்பாகவுள்ளாகத் தெரிவித்தார்

தேர்தலூடாகவே கொள்கை ரீதியான மாற்றங்களும் சட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும்- அகிலன் வேண்டுகோள் samugammedia தேர்தலூடாகவே கொள்கை ரீதியான மாற்றங்களும் சட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உபதலைவர் அகிலன்  கதிர்காமர் தெரிவித்துள்ளார்இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்களின் வருமானமானது தற்போது அதிகரிக்கவில்லை எனினும் செலவுகள் இரு மடங்காகியுள்ளன. உலக உணவுத் திட்ட புள்ளிவிபரத்தின் படி நாற்கூலி செய்பவர்களின் வருமானம் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது.நாட்டில் அரசியல் நெருக்கடியுமுள்ளது. போர் வீரர் என்று கூறிய  கோட்டபாயா நாட்டைவிட்டு ஓடினாலும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களே ஜனாதிபதியை கொண்டுவந்தனர். தம்மை நியாயப்படுத்த முடியாததால் சட்ட மாற்றம் கொள்கை மாற்றத்தை கொண்டுவருகின்றனர்.இதனால்  மக்கள் பெரிதும் பாதிக்ப்படுகின்றனர்.  இதைவிட எமது அரசியல் உரிமை போன்ற  அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தி மக்களைச் சுரண்டும நிலையுள்ளது.  ஆகவே அந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.உழைக்கும் மக்களின் ஓய்வூதியமாக இருக்கும் ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதிய வட்டிவீதத்தை எதிர்வரும் காலத்தில்  குறைக்கவுள்ளதாக வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளனர்.இது தோட்டத் தொழிலாளர்கள் முதல் பல்கலைக்கழக ஊழியர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.ஒருவர் 10 வருடம் வேலை செய்து ஓய்வுபெறும் பட்சத்தில் கடன் மறுசீரமைப்பு நிலை.தொடருமாயின்  பெறும் ஓய்வூதியத் தொகையில் 30 சதவீத பண இழப்பு ஏற்படும் நிலையுள்ளது.எத்தனையோ தனியார் முதலாளிகள் முதலிட்ட முதலீடுகளில் கடன் மறு சீரமைப்பை மேற்கொள்ளாமல் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றில் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் நியாயமற்ற பாராளுமன்றத்தை பயன்படுத்தி நாட்டையே வித்தியாசமான நிலைக்குட்படுத்தும் நிலையுள்ளது. அரசாங்கம் ஜனநாயகமற்ற நிலையிலுள்ள நிலையி்ல் ஏனைய நிறுவனங்களும் ஏதேட்சையான ஜனநாயகமற்ற நிலையிலேயுள்ளன.இது அரசியல் , பொருளாதார , சட்ட அடக்குமுறை என்றே கருதலாம். எதிர்வரும் காலங்களில் வரும் பாரிய மாற்றங்கள் முற்போக்கானவையா பிற்போக்கானவையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க  வேண்டும். இவ்வாறு சென்றால் பாசிச நிலைக்குள்ளே செல்லும். இந் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பாரிய எதி்ப்பை இதுவரை தெரிவிகாதது கவலையளிக்கும் விடயம்.நாம் இவற்றிற்கான தீர்வு சர்வதேசத்திடமிருந்து தீர்வு வருமென எதிர்பார்த்தாலும் மாறாக தீர்வு மக்களிடமே உள்ளது.  கடன் மறுசீரமைப்பை கூட சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன. தேர்தலூடாக ஜனநாயக மாற்றத்தின் பின்னரே கொள்கை ரீதியான மாற்றங்களாயினும்  சட்டங்களாயினும் கொண்டுவரப்பட வேண்டும்.எது எவ்வாறாயினும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டங்களை அடக்கும் நோக்கிலேயே  அரசாங்கம் முனைப்பாகவுள்ளாகத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement