• Sep 20 2024

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் பல அச்சுறுத்தல்களைத் தாண்டி ஆரம்பம்! samugammedia

Chithra / Aug 18th 2023, 11:47 am
image

Advertisement

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

குருந்தூர் மலையில்  வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். 

பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆலய சூழலில் பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இதேவேளை, குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை  விகாராதிபதி  கல்கமுவ சாந்தபோதி  தேரருக்கோ  அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும்  பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று நேற்றையதினம் கட்டளை பிறப்பித்திருந்தது.

இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் பல அச்சுறுத்தல்களைத் தாண்டி ஆரம்பம் samugammedia குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.குருந்தூர் மலையில்  வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், ஆலய சூழலில் பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை  விகாராதிபதி  கல்கமுவ சாந்தபோதி  தேரருக்கோ  அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும்  பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று நேற்றையதினம் கட்டளை பிறப்பித்திருந்தது.இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement