பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நேற்றையதினம் வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டி சவாரி திடலில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் வணிகர் நடுவம், ஐக்கிய இராச்சியம் நிதி அனுசரனையுடன் கண்ணகி மாட்டுவண்டி சவாரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான உழவர் தின பெருவிழா நேற்றையதினம் (09) இடம்பெற்றிருந்தது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பாரம்பரிய இசையான பறை , தப்பாட்ட குழுவினரின் வரவேற்பு நிகழ்வுடன் பொங்கல்விழா ஆரம்பமாகியிருந்தது.
அதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, தலையணை சண்டை, கிறிஸ்மரம் ஏறுதல், சவால், வணிஸ் சாப்பிடுதல், வலூன் ஊதி உடைத்தல், படகோட்டபோட்டி, முட்டிஉடைத்தல், சாக்கோட்டம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த உழவர் தின போட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், புலம்பெயர் உறவுகள், கண்ணகி மாட்டுவண்டி சவாரிச்சங்கத்தினர், விவசாயிகள் , சிறுவர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறித்த உழவர் தின பெருவிழாவானது கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் நேற்றையதினம் (09) இடம்பெற்றி ருந்தது. பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நேற்றையதினம் வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டி சவாரி திடலில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
வற்றாப்பளையில் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் பொங்கல் விழா பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நேற்றையதினம் வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டி சவாரி திடலில் இடம்பெற்றிருந்தது.தமிழ் வணிகர் நடுவம், ஐக்கிய இராச்சியம் நிதி அனுசரனையுடன் கண்ணகி மாட்டுவண்டி சவாரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான உழவர் தின பெருவிழா நேற்றையதினம் (09) இடம்பெற்றிருந்தது.கொடியேற்றத்தினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பாரம்பரிய இசையான பறை , தப்பாட்ட குழுவினரின் வரவேற்பு நிகழ்வுடன் பொங்கல்விழா ஆரம்பமாகியிருந்தது. அதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, தலையணை சண்டை, கிறிஸ்மரம் ஏறுதல், சவால், வணிஸ் சாப்பிடுதல், வலூன் ஊதி உடைத்தல், படகோட்டபோட்டி, முட்டிஉடைத்தல், சாக்கோட்டம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.குறித்த உழவர் தின போட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், புலம்பெயர் உறவுகள், கண்ணகி மாட்டுவண்டி சவாரிச்சங்கத்தினர், விவசாயிகள் , சிறுவர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்திருந்தனர்.குறித்த உழவர் தின பெருவிழாவானது கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் நேற்றையதினம் (09) இடம்பெற்றி ருந்தது. பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நேற்றையதினம் வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டி சவாரி திடலில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.