• Oct 18 2024

மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டு கால வரலாற்றை முன்னிட்டு கொழும்பில் தபால் தலை வெளியீடு...!

Sharmi / May 20th 2024, 3:29 pm
image

Advertisement

மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை  நேற்றையதினம்(19)  வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலைமையில்  கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வெளியிடப்பட்ட தபால் தலை, வாழும் கலை ஆன்மீக நிறுவனத்தின் தலைவரும் உலக சமாதான ஆன்மீக தலைவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிஜி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

மேலும், இந்த நிகழ்விற்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களோடு, வெளிநாட்டு தூதுவர்களும், முக்கிய பிரமுகர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டு கால வரலாற்றை முன்னிட்டு கொழும்பில் தபால் தலை வெளியீடு. மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை  நேற்றையதினம்(19)  வெளியிடப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலைமையில்  கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் வெளியிடப்பட்ட தபால் தலை, வாழும் கலை ஆன்மீக நிறுவனத்தின் தலைவரும் உலக சமாதான ஆன்மீக தலைவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிஜி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்விற்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களோடு, வெளிநாட்டு தூதுவர்களும், முக்கிய பிரமுகர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement