• Nov 29 2026

தபால் தொழிற்சங்கங்களும் நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு!

Chithra / Nov 29th 2026, 4:13 pm
image


நாளை (30) பல அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தபால் திணைக்களத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.


எனினும் தபால் ஊழியர்கள் நேரடியாகப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.



வாழ்க்கைச் செலவு மற்றும் சேவைக் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு வரவு - செலவுத் திட்ட ஆலோசனைகளின்போது தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொதுவான கொடுப்பனவை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மாத்திரம் வெவ்வேறு கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


எதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் தபால் ஊழியர்கள் நேரடியாகத் தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும், அரச ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் தபால் திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் தொழிற்சங்கங்களும் நாளைய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு நாளை (30) பல அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தபால் திணைக்களத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.எனினும் தபால் ஊழியர்கள் நேரடியாகப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.வாழ்க்கைச் செலவு மற்றும் சேவைக் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு வரவு - செலவுத் திட்ட ஆலோசனைகளின்போது தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொதுவான கொடுப்பனவை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மாத்திரம் வெவ்வேறு கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.எதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் தபால் ஊழியர்கள் நேரடியாகத் தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும், அரச ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் தபால் திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement