• Mar 31 2025

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Chithra / Oct 16th 2024, 12:34 pm
image

 

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸாருக்கான தபால் மூல வாக்குகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் குறிக்கப்பட உள்ளன.

ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுகள் குறிக்கும் நடவடிக்கைகள் நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் தபால் மூல வாக்கினை அளிக்கலாம்.

அவர்கள் பணிபுரியும் இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு  பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸாருக்கான தபால் மூல வாக்குகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் குறிக்கப்பட உள்ளன.ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுகள் குறிக்கும் நடவடிக்கைகள் நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் தபால் மூல வாக்கினை அளிக்கலாம்.அவர்கள் பணிபுரியும் இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement