• Nov 22 2024

திருமலையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நடைபவணி

Tharmini / Oct 16th 2024, 12:41 pm
image

திருகோணமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையான நகரை உருவாக்கவும் என்றதொரு விழிப்புணர்வு நடைபவணி இன்று (16)இடம்பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை எகட் கரித்தாஸ் ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் பிரகாரம் "சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை " எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த நடை பவணியானது திருகோணமலை நகர் பஸ் நிலையத்தில் இருந்து திருகோணமலை நகரசபை வரை நடை பவணியாக சென்று நகர சபை செயலாளரிடம் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை, வீதிகள் பொது இடங்களில் குப்பை போடாதீர்கள், மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் களை ஒழிப்போம், மரங்களை வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசிப்போம் போன்ற பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் நடை பவணியாக சென்றனர்.

இதில் பொதுமக்கள் எகட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







திருமலையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நடைபவணி திருகோணமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையான நகரை உருவாக்கவும் என்றதொரு விழிப்புணர்வு நடைபவணி இன்று (16)இடம்பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை எகட் கரித்தாஸ் ஏற்பாடு செய்திருந்தது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் பிரகாரம் "சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை " எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த நடை பவணியானது திருகோணமலை நகர் பஸ் நிலையத்தில் இருந்து திருகோணமலை நகரசபை வரை நடை பவணியாக சென்று நகர சபை செயலாளரிடம் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை, வீதிகள் பொது இடங்களில் குப்பை போடாதீர்கள், மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் களை ஒழிப்போம், மரங்களை வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசிப்போம் போன்ற பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் நடை பவணியாக சென்றனர். இதில் பொதுமக்கள் எகட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement