• Nov 24 2024

அஞ்சல் மூல வாக்களிப்பு 80 சதவீதம் நிறைவு!

Tamil nila / Sep 6th 2024, 8:42 pm
image

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 உத்தியோகபூர்வமாக தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.

 இன்றையதினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

 அஞ்சல் மூல வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

 அவ்வாறு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பு 80 சதவீதம் நிறைவு ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்றது. இன்றையதினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அஞ்சல் மூல வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement