• Feb 13 2025

நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு!

Chithra / Feb 13th 2025, 9:19 am
image

  

இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

இதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ள நிலையில் அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு   இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளதுஅதன்படி மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளதுஇதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ள நிலையில் அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement