• May 30 2025

வவுனியாவின் பல பகுதிகளிலும் மின்தடை: மக்கள் அவதி..!

Sharmi / May 29th 2025, 5:02 pm
image

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று(29) பல பகுதிகளலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது.

இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரபுளியங்குளம், பண்டாரிக்குளம், மன்னார் வீதி, ஊக்குளாங்குளம், இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

அதிலும், பல பகுதிகளில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியாவின் பல பகுதிகளிலும் மின்தடை: மக்கள் அவதி. வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.வவுனியாவில் இன்று(29) பல பகுதிகளலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரபுளியங்குளம், பண்டாரிக்குளம், மன்னார் வீதி, ஊக்குளாங்குளம், இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.அதிலும், பல பகுதிகளில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement