மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்சாரசபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் வழங்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.
கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம்.
எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும்.
நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது இலங்கை மின்சாரசபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.
எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே மின்சாரசபை முன்னெடுக்க வேண்டியுள்ளது. என கூறியுள்ளார்.
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மின்சாரசபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் வழங்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம்.எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.அதன்பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும்.நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது இலங்கை மின்சாரசபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே மின்சாரசபை முன்னெடுக்க வேண்டியுள்ளது. என கூறியுள்ளார்.