• Sep 20 2024

பிரபாவின் கட்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

Sharmi / Dec 17th 2022, 7:39 pm
image

Advertisement

முன்னாள் பிரதி அமைச்சர் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின் அங்குரார்பண நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.


கொழும்பு சுகததாஸ விளையாட்டு கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் சின்னமாக தபால் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டது.கட்சியின் தலைவராக பிரபா கணேசன் செயற்படுகின்றார்.கட்சியின் பொது செயலாளராக சுரேஷ் கங்காதரனும், தேசிய அமைப்பாளராக ராஜேந்திரனும், பிரதித் தலைவராக குமரகுருபரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக தமது கட்சி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.இளைஞர்களை முன்னிலைப்படுத்திய அரசியல் கட்சியாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணம், வன்னி தேர்தல் மாவட்டம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தமது அரசியல் செயற்பாடு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அரசியல் சேறுபூசும் செயற்பாடுகளை தவிர்த்து, முழுமையான மக்கள் சேவையில் ஈடுபடுவதே தமது கட்சியின் நோக்கம் என பிரபா கணேசன் குறிப்பிட்டார்.

பிரபாவின் கட்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் முன்னாள் பிரதி அமைச்சர் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின் அங்குரார்பண நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.கொழும்பு சுகததாஸ விளையாட்டு கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.ஜனநாயக மக்கள் காங்கிரஸின் சின்னமாக தபால் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டது.கட்சியின் தலைவராக பிரபா கணேசன் செயற்படுகின்றார்.கட்சியின் பொது செயலாளராக சுரேஷ் கங்காதரனும், தேசிய அமைப்பாளராக ராஜேந்திரனும், பிரதித் தலைவராக குமரகுருபரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக தமது கட்சி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.இளைஞர்களை முன்னிலைப்படுத்திய அரசியல் கட்சியாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.மேல் மாகாணம், வன்னி தேர்தல் மாவட்டம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தமது அரசியல் செயற்பாடு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அரசியல் சேறுபூசும் செயற்பாடுகளை தவிர்த்து, முழுமையான மக்கள் சேவையில் ஈடுபடுவதே தமது கட்சியின் நோக்கம் என பிரபா கணேசன் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement