• Nov 26 2024

பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் - காற்றின் நிலை அதிகரிக்கும் -பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

Tamil nila / May 19th 2024, 7:01 am
image

பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்  திணைக்களம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று  (19) வரை செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் - காற்றின் நிலை அதிகரிக்கும் -பொது மக்களுக்கு எச்சரிக்கை பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்  திணைக்களம்  குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று  (19) வரை செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement