• Nov 28 2024

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை - இணக்கம் வெளியிட்டார் ஜனாதிபதி

Chithra / Feb 5th 2024, 2:05 pm
image


ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். 

சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரின் தாய் மற்றும் சகோதரர்களுக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்

விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றமை தெரிந்த விடயமே.


சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை - இணக்கம் வெளியிட்டார் ஜனாதிபதி ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரின் தாய் மற்றும் சகோதரர்களுக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றமை தெரிந்த விடயமே.

Advertisement

Advertisement

Advertisement