• Feb 11 2025

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

Chithra / Feb 10th 2025, 11:02 am
image

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்‍தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, டுபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்  ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்‍தை மேற்கொள்ளவுள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, டுபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement