அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார்.
புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதம் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதம் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்