• Apr 13 2025

கொழும்பு மேற்கு முனையத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்தார் அதானி

Chithra / Apr 8th 2025, 12:48 pm
image


அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள அதன் புதிய கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச - தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு மேற்கு முனையத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்தார் அதானி அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள அதன் புதிய கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச - தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement