• Nov 22 2024

நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகும் ஜனாதிபதி ரணில்...! தேர்தல் நாடகம் அரங்கேற்றம்...! சஜித் தரப்பு குற்றச்சாட்டு...!

Sharmi / Jun 25th 2024, 8:40 pm
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருகின்றமையானது ஒரு தேர்தல் நாடகமே என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான  எஸ்.எம்.மரிக்கார் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது எனவும் கூறவுள்ளார்.

ஆனால் நாடு மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை அவர் இதற்கு முன்னரும் விடுத்திருந்தார்.

எனவே,தேர்தல் நாடகமாகவே இது அரங்கேற்றப்படவுள்ளது.

களனி ஆற்றில் நாகம் வந்தது என நாடகமாடி கோட்டாபய ராஜபக்ச வாக்கு திரட்டினார்.

தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது எனக்கூறி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து விழா எடுத்து வாக்கு திரட்ட ஜனாதிபதி தயாராகின்றார்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என கடன் வழங்கும் நிறுவனங்கள் பட்டியலிடவில்லை.

எனவே, இந்த கண்துடைப்பு நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது எனவும் தெரிவித்தார்.


நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகும் ஜனாதிபதி ரணில். தேர்தல் நாடகம் அரங்கேற்றம். சஜித் தரப்பு குற்றச்சாட்டு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருகின்றமையானது ஒரு தேர்தல் நாடகமே என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான  எஸ்.எம்.மரிக்கார் கருத்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது எனவும் கூறவுள்ளார். ஆனால் நாடு மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை அவர் இதற்கு முன்னரும் விடுத்திருந்தார்.எனவே,தேர்தல் நாடகமாகவே இது அரங்கேற்றப்படவுள்ளது.களனி ஆற்றில் நாகம் வந்தது என நாடகமாடி கோட்டாபய ராஜபக்ச வாக்கு திரட்டினார்.தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது எனக்கூறி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து விழா எடுத்து வாக்கு திரட்ட ஜனாதிபதி தயாராகின்றார்.நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என கடன் வழங்கும் நிறுவனங்கள் பட்டியலிடவில்லை. எனவே, இந்த கண்துடைப்பு நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement