உகாண்டாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு துப்பாக்கி வேட்டு முழக்கத்துடன் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கம்பாலா நகரை சென்றடைந்த ஜனாதிபதியை உகாண்டாவின் வெளிவிவகார அமைச்சர் ஓரியெம் ஒகெல்லோ மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் கென்யாவிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கனகநாதன் ஆகியோர் விருந்தினரை வரவேற்றனர்.
சிகப்பு கம்பளம் மற்றும் அரச வரவேற்புடன் கூடிய இந்த வரவேற்பு இலங்கைக்கும் உகாண்டாவுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை வெளிப்படுத்தியது.
பிரமாண்ட துப்பாக்கி வேட்டு முழக்கம் விஜயத்தின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.
உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உகாண்டா சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்.samugammedia உகாண்டாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு துப்பாக்கி வேட்டு முழக்கத்துடன் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் கம்பாலா நகரை சென்றடைந்த ஜனாதிபதியை உகாண்டாவின் வெளிவிவகார அமைச்சர் ஓரியெம் ஒகெல்லோ மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் கென்யாவிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கனகநாதன் ஆகியோர் விருந்தினரை வரவேற்றனர்.சிகப்பு கம்பளம் மற்றும் அரச வரவேற்புடன் கூடிய இந்த வரவேற்பு இலங்கைக்கும் உகாண்டாவுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை வெளிப்படுத்தியது.பிரமாண்ட துப்பாக்கி வேட்டு முழக்கம் விஜயத்தின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.