• Nov 22 2024

இந்தோனேசியாவில் சந்திரிக்காவுடன் மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி ரணில்..?

Chithra / May 24th 2024, 12:49 pm
image

  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இடையில் மந்திராலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கு சந்திரிக்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. 

எனினும் அங்கு பேப்பட்ட விடயம் குறித்து தகவல்கள் ரகசியாகமாக பேணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, அனுர யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் சென்றுள்ளது.

குறித்த நால்வரும் பண்டாரநாயக்க ஆதரவாளர்கள் என்ற வகையில் அண்மைக்காலம் வரை முக்கிய நபர்களாக இடம்பிடித்திருந்தனர்.

இவர்களுக்கு மேலதிகமாக ரணில் விக்ரமசிங்கவுடன் நிமல் லான்சாவும் இந்த பயணத்தில் இணைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவில் சந்திரிக்காவுடன் மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி ரணில்.   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இடையில் மந்திராலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கு சந்திரிக்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. எனினும் அங்கு பேப்பட்ட விடயம் குறித்து தகவல்கள் ரகசியாகமாக பேணப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணிலுடன், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, அனுர யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் சென்றுள்ளது.குறித்த நால்வரும் பண்டாரநாயக்க ஆதரவாளர்கள் என்ற வகையில் அண்மைக்காலம் வரை முக்கிய நபர்களாக இடம்பிடித்திருந்தனர்.இவர்களுக்கு மேலதிகமாக ரணில் விக்ரமசிங்கவுடன் நிமல் லான்சாவும் இந்த பயணத்தில் இணைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement