• Nov 26 2024

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்..!

Chithra / Jan 20th 2024, 2:10 pm
image

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்.

 

உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று  இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ், எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா ஆகியோரை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  உகண்டா - கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒடோங்கோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் மற்றும் மாலைதீவு, அல்ஜீரியா, கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல்கள் மூலம் புதிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில். அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில். உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.குறித்த கலந்துரையாடலானது நேற்று  இடம்பெற்றுள்ளது.இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ், எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா ஆகியோரை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை  உகண்டா - கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒடோங்கோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.அத்துடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் மற்றும் மாலைதீவு, அல்ஜீரியா, கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த கலந்துரையாடல்கள் மூலம் புதிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement