• Sep 20 2024

“வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tamil nila / Jan 12th 2023, 3:23 pm
image

Advertisement

இந்தியாவினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சூம் தொழினுட்பத்தினூடாக கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அங்கோலியா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், உஸ்பெஸ்கிஸ்தான் மொங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சூம் தொழினுட்பத்தினூடாக கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.அங்கோலியா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், உஸ்பெஸ்கிஸ்தான் மொங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement