• Nov 28 2024

வடக்கில் நான்கு நாள்கள் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களை நடத்தவுள்ள ஜனாதிபதி ரணில்!

Chithra / Dec 31st 2023, 8:26 am
image

 


புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்குக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். 

அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார்.

5 ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், 

மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார்.

6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து,

10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

வடக்கில் நான்கு நாள்கள் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களை நடத்தவுள்ள ஜனாதிபதி ரணில்  புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்குக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கமைய எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார்.5 ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார்.6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து,10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார்.அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement