• Jun 29 2024

ஊழலுக்கு எதிராக மக்கள் படையை திரட்டும் ரொஷான் எம்.பி.! ஜனவரியில் உதயமாகும் அமைப்பு..!

Chithra / Dec 31st 2023, 8:20 am
image

Advertisement


அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.

அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. 

இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஊழலுக்கு எதிராக மக்கள் படையை திரட்டும் ரொஷான் எம்.பி. ஜனவரியில் உதயமாகும் அமைப்பு. அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement