• May 08 2026

யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...!samugammedia

Ziya / Jan 4th 2024, 4:21 pm
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு சற்றுமுன் விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் யாழில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

அதேவேளை யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு,  அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை  ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார்.


யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு சற்றுமுன் விஜயம் செய்துள்ளார்.இந்நிலையில் யாழில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.அதேவேளை யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு,  அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை  ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார்.

Advertisement

Advertisement

Advertisement