• May 21 2024

யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி...! காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி...! அமைச்சர் டக்ளஸ் உறுதி...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 3:20 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள  காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது. அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது. ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு  வருகிறது.

அவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டு

உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் காணி விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை ஜனாதிபதி காட்டுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அமைச்சரிடம் கேட்ட போது.

வடக்கில் எம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன். அதனால் சந்திப்புக்கு செல்லவில்லை. ஜனாதிபதியுடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்க கூடிய நிலையில் உள்ளேன். பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன்.

என் கட்சி சார்பில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கலந்து கொண்டார் என பதில் அளித்தார்.


யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி. காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி. அமைச்சர் டக்ளஸ் உறுதி.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.யாழில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள  காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது. அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது. ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு  வருகிறது. அவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டுஉயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் காணி விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை ஜனாதிபதி காட்டுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.அதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அமைச்சரிடம் கேட்ட போது.வடக்கில் எம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன். அதனால் சந்திப்புக்கு செல்லவில்லை. ஜனாதிபதியுடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்க கூடிய நிலையில் உள்ளேன். பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன்.என் கட்சி சார்பில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கலந்து கொண்டார் என பதில் அளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement