• Dec 03 2024

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..!!

Tamil nila / May 6th 2024, 8:19 pm
image

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் நிஷாந்த மானகேவினால் படைவீரர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் மே மாதம் ‘படைவீரர் நினைவு மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குரூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ஏராளமான முப்படைகளின் இராணுவ வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததுடன், பெருமளவு இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் முப்படைகளின் தளபதி ஜனாதிபதிக்கு தேசிய படைவீரர் கொடி அணிவிப்பதன் மூலம் படைவீரர்களின் மாதம் ஆரம்பமாகிறது.

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு. தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது.ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் நிஷாந்த மானகேவினால் படைவீரர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் மே மாதம் ‘படைவீரர் நினைவு மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குரூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ஏராளமான முப்படைகளின் இராணுவ வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததுடன், பெருமளவு இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் முப்படைகளின் தளபதி ஜனாதிபதிக்கு தேசிய படைவீரர் கொடி அணிவிப்பதன் மூலம் படைவீரர்களின் மாதம் ஆரம்பமாகிறது.

Advertisement

Advertisement

Advertisement