ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களை அணுகும் வகையில் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக, வாக்களிப்பதற்கான அட்டைகளை ‘On-line Registration’ என்ற இணைய வழி பதிவு மூலம் பார்வையிட முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.
மேலும் தபால் மூலம் வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் அவை தொடர்பான விபரங்களை கண்டறியுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு இணையவழி முறை அறிமுகம் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களை அணுகும் வகையில் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கமைவாக, வாக்களிப்பதற்கான அட்டைகளை ‘On-line Registration’ என்ற இணைய வழி பதிவு மூலம் பார்வையிட முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுவாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.மேலும் தபால் மூலம் வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் அவை தொடர்பான விபரங்களை கண்டறியுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.