• May 17 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்...! மரிக்கார் எம்.பி வலியுறுத்து...!

Sharmi / Feb 12th 2024, 4:03 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று(12)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக தேர்தலை ஒத்திவைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்காது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் பேசுகின்றன.

ஆனால் வரிச்சுமையை குறைப்பது குறித்து அரச சார்பற்ற அமைப்புக்கள் பேசவில்லை.

9 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்த போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும்.

ஆனால் பாராளுமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை அதிகாரம் இல்லை. நாட்டை இரத்தக் கடலாக மாற்றும் நெருக்கடியைத் தவிர்க்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வாய்ப்பு வழங்குங்கள்.மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடிவுகளை எடுப்பர் எனவும் தெரிவித்தார்.



நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். மரிக்கார் எம்.பி வலியுறுத்து. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று(12)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக தேர்தலை ஒத்திவைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்காது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் பேசுகின்றன. ஆனால் வரிச்சுமையை குறைப்பது குறித்து அரச சார்பற்ற அமைப்புக்கள் பேசவில்லை.9 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்த போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை அதிகாரம் இல்லை. நாட்டை இரத்தக் கடலாக மாற்றும் நெருக்கடியைத் தவிர்க்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வாய்ப்பு வழங்குங்கள்.மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடிவுகளை எடுப்பர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement