• Nov 23 2024

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு..!

Chithra / Mar 14th 2024, 10:52 am
image

 

வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.

இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  

அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக இந்த ஆண்டு, சுற்றுலாப் போக்குவரத்துக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 


வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு.  வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக இந்த ஆண்டு, சுற்றுலாப் போக்குவரத்துக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement