COP 28 மாநாட்டிற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது.
இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (30) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையிலான உயர்மட்ட இலங்கை குழு கலந்துகொண்டுள்ளது.
Cop 28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனரை்.
இலங்கை - பிரான்ஸ் ஜனாதிபதிகள் டுபாயில் சந்திப்பு; தொடர்புகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனைsamugammedia COP 28 மாநாட்டிற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது.இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.ஐக்கிய இராச்சியத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (30) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையிலான உயர்மட்ட இலங்கை குழு கலந்துகொண்டுள்ளது.Cop 28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனரை்.