அண்மையில் கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் புதன்கிழமை (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன், கோவில் ஒன்றில் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டார்.
நவம்பர் 16ஆம் திகதி கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தாக்கப்பட்டதில் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களினால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறுவன் உயிரிழப்பு தொடர்பில் ஐனாதிபதி விடுத்துள்ள உத்தரவு அண்மையில் கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் புதன்கிழமை (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன், கோவில் ஒன்றில் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டார்.நவம்பர் 16ஆம் திகதி கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.தாக்கப்பட்டதில் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களினால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.