• Nov 28 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..! தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை

Chithra / Mar 22nd 2024, 8:01 am
image

 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருதரப்பினரையும் பாதுகாக்கும் முறைமையின் 

ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரசித்தப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்நோக்கவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் 

செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் நேற்று முதல் புதிய 

விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரிய வெங்காயம் 100 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபாவாகும்.

சிவப்பு கௌபி 52 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 998 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், பாஸ்மதி அரிசி 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 650 ரூபாவாகவும்.

சிவப்பு வெங்காயம் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபாவாகவும் சோயா மீட் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 

அதன் புதிய விலை 595 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிவப்பு அரிசி 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாய்க்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு. தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.அத்துடன், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருதரப்பினரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரசித்தப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்நோக்கவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.இதேவேளை பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் நேற்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, பெரிய வெங்காயம் 100 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபாவாகும்.சிவப்பு கௌபி 52 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 998 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும், பாஸ்மதி அரிசி 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 650 ரூபாவாகவும்.சிவப்பு வெங்காயம் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும் வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிவப்பு சீனி 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபாவாகவும் சோயா மீட் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 595 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.சிவப்பு அரிசி 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாய்க்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement