வட மாகாண மக்களுக்கு தேவையான சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து யாழிற்கு நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு கப்பல் யாழிற்கு வருவதற்கான பேச்சுக்களும் இடம்பெறுகிறது.
பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பலும் வரும். அதன் போது சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும், தட்டுப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும்.
அதேவேளை நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சரக்கு கப்பல் வந்தால் செலவு குறைந்து பொருட்களின் விலையில் மாற்றப்படும். அவை கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
யாழில் குறைவடையவுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகள். ஜனவரி முதல் ஆரம்பம். அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.samugammedia வட மாகாண மக்களுக்கு தேவையான சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து யாழிற்கு நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு கப்பல் யாழிற்கு வருவதற்கான பேச்சுக்களும் இடம்பெறுகிறது.பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பலும் வரும். அதன் போது சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும், தட்டுப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும்.அதேவேளை நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சரக்கு கப்பல் வந்தால் செலவு குறைந்து பொருட்களின் விலையில் மாற்றப்படும். அவை கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.