• Nov 23 2024

சீன அரிசிக்காக யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் தினேஸ்...! நகைப்புக்குரியது என்கிறார் சுப்பிரமணியம்..!

Sharmi / Jul 13th 2024, 8:24 am
image

சீன அரிசியை வழங்க இதுவரை யாழ் வராத பிரதமர் வருகை தந்தமை நகைப்பானது எனவும் இவ்வாறான போலி திட்டங்களை விடுத்து இலங்கையின் கடன் வட்டி வீதத்தை குறைக்க சீனா முன்வரவேண்டும் எனவும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார் 

யாழில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிசியை வழங்குவதற்கு எமது பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார் என அறிகின்றோம்.

சாதாரண அரிசியை வழங்குவதற்கு பிரதமர் வருகை தந்திருப்பது மிக நகைச்சுவையான ஒரு விடயம்.

பிரதேச செயலகங்களில் இந்த அரசியினை வழங்கியிருந்தால் அவர்கள் மிக இலகுவாக அதனை விநியோகித்து இருப்பார்கள்.

ஏற்கனவே இந்த பழுதடைந்த சீன அரிசி எமது நாட்டில் தோல்வியடைந்த நிலையில் ,வெளிப்படையாக அந்த அரிசி நல்ல தோற்றத்தினை காட்டினாலும் சீனாவினை பொறுத்தவரை எமக்கு சந்தேகம் எழுகிறது .

நல்ல பொருளை செய்வதும் போலியான பொருளை செய்வதும் சீன தொழில்நுட்பத்தில் உள்ளது.

 இவ்வாறாக நல்ல அரிசி எது கெட்ட அரிசி எது என நாம் அடையாளம் காண முடியாது.இருந்தும் சீன அரிசியை கொண்டு வருவதை விட எமது மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பின் எமது நாட்டில் அரிசியை கொள்வனவு செய்து வழங்கலாம் மாறாக சீன கொலனிகளுக்கு வழங்குவது போல வழங்குவது தவறான விடயம்.

தொடர்ச்சியாக அபிவிருத்தி வேலைகளும் இங்கே நடக்கின்றது இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு மாற்றீடாக பல விடயங்கள் இருக்கின்றது.

அபிவிருத்திகளை கடனுக்கு வழங்கி அதனை அறாவட்டிகளை பெற்று கொள்ளும் நாடுகளால் எமது நாடு பட்டினியினையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டது.

அந்த நிலையினை ஏற்படுத்தாது இவ்வாறான நாடுகள் அரசியினை வழங்காது கடன் வட்டி வீதங்களை குறைக்கலாம்.பொருளாதாரத்தை வளர்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சீன அரிசிக்காக யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் தினேஸ். நகைப்புக்குரியது என்கிறார் சுப்பிரமணியம். சீன அரிசியை வழங்க இதுவரை யாழ் வராத பிரதமர் வருகை தந்தமை நகைப்பானது எனவும் இவ்வாறான போலி திட்டங்களை விடுத்து இலங்கையின் கடன் வட்டி வீதத்தை குறைக்க சீனா முன்வரவேண்டும் எனவும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார் யாழில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிசியை வழங்குவதற்கு எமது பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார் என அறிகின்றோம். சாதாரண அரிசியை வழங்குவதற்கு பிரதமர் வருகை தந்திருப்பது மிக நகைச்சுவையான ஒரு விடயம். பிரதேச செயலகங்களில் இந்த அரசியினை வழங்கியிருந்தால் அவர்கள் மிக இலகுவாக அதனை விநியோகித்து இருப்பார்கள்.ஏற்கனவே இந்த பழுதடைந்த சீன அரிசி எமது நாட்டில் தோல்வியடைந்த நிலையில் ,வெளிப்படையாக அந்த அரிசி நல்ல தோற்றத்தினை காட்டினாலும் சீனாவினை பொறுத்தவரை எமக்கு சந்தேகம் எழுகிறது .நல்ல பொருளை செய்வதும் போலியான பொருளை செய்வதும் சீன தொழில்நுட்பத்தில் உள்ளது. இவ்வாறாக நல்ல அரிசி எது கெட்ட அரிசி எது என நாம் அடையாளம் காண முடியாது.இருந்தும் சீன அரிசியை கொண்டு வருவதை விட எமது மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பின் எமது நாட்டில் அரிசியை கொள்வனவு செய்து வழங்கலாம் மாறாக சீன கொலனிகளுக்கு வழங்குவது போல வழங்குவது தவறான விடயம்.தொடர்ச்சியாக அபிவிருத்தி வேலைகளும் இங்கே நடக்கின்றது இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு மாற்றீடாக பல விடயங்கள் இருக்கின்றது. அபிவிருத்திகளை கடனுக்கு வழங்கி அதனை அறாவட்டிகளை பெற்று கொள்ளும் நாடுகளால் எமது நாடு பட்டினியினையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டது.அந்த நிலையினை ஏற்படுத்தாது இவ்வாறான நாடுகள் அரசியினை வழங்காது கடன் வட்டி வீதங்களை குறைக்கலாம்.பொருளாதாரத்தை வளர்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement