• Feb 15 2025

பலத்த பாதுகாப்புடன் யாழிற்கு வந்த பிரதமர் ஹரிணி..!

Sharmi / Feb 15th 2025, 12:09 pm
image

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு, பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை, யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பலத்த பாதுகாப்புடன் யாழிற்கு வந்த பிரதமர் ஹரிணி. பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு, பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அதேவேளை, யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement