• Feb 15 2025

வத்திராயனில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு..!

Sharmi / Feb 15th 2025, 11:57 am
image

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம்  நேற்றையதினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன்,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் இன்று(15) காலை ஆரம்பமான நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மண்டபத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளை பொறுப்பாளர் ஷாம், சிகரம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர்,மருதங்கேணி சுகாதார பரிசோதகர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



வத்திராயனில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு. வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம்  நேற்றையதினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன்,டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் இன்று(15) காலை ஆரம்பமான நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மண்டபத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளை பொறுப்பாளர் ஷாம், சிகரம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர்,மருதங்கேணி சுகாதார பரிசோதகர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement