நோர்வே செஸ் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு தமிழக வீரர் குகேஷுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நோர்வே செஸ் போட்டியில் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக சம்பியனான தமிழக வீரர் குகேஷ் தொம்மராஜூ தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார்.
நோர்வே செஸ் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் மற்றும் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் மோதினர்.
நீண்ட காலமாக உலகின் முதல் தர இடத்தைப் பிடித்திருந்த மேக்னஸ் கார்ல்சனை வியத்தகு முறையில் வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தார் தமிழக வீரர் குகேஷ்.
அவரது வெற்றியை வாழத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
குகேஷ் ஒரு விதிவிலக்கான சாதனை! மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நோர்வே சதுரங்கப் போட்டியின் 6 ஆவது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று தெரிவித்து குகேஷுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
நோர்வே செஸ் போட்டியில் சாதித்த தமிழன் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து நோர்வே செஸ் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு தமிழக வீரர் குகேஷுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நோர்வே செஸ் போட்டியில் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக சம்பியனான தமிழக வீரர் குகேஷ் தொம்மராஜூ தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார். நோர்வே செஸ் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் மற்றும் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் மோதினர். நீண்ட காலமாக உலகின் முதல் தர இடத்தைப் பிடித்திருந்த மேக்னஸ் கார்ல்சனை வியத்தகு முறையில் வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தார் தமிழக வீரர் குகேஷ். அவரது வெற்றியை வாழத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்ததாவது, குகேஷ் ஒரு விதிவிலக்கான சாதனை மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நோர்வே சதுரங்கப் போட்டியின் 6 ஆவது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று தெரிவித்து குகேஷுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.