ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார்.
வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்,
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதேவேளை அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பையும் இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
அனுராதபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடி; ரயில் சமிக்ஞை அமைப்பும் திறந்து வைப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார்.வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.இதேவேளை அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பையும் இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது