வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை காலமும் கல்வி விடுமுறையில் நின்று , பாடசாலைக்கு பரீட்சை அனுமதி பெற வித விதமான சிகை அலங்கரிப்புடன் இன்றைய தினம் சென்றுள்ளனர்.
அவ்வாறு வித்தியசமான சிகை அலங்கரிப்புடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை சிகை அகலங்கரிப்பை சீர் செய்து வருமாறு பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.
உடனேயே பாடசாலைக்கு அருகில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் சிகை அலங்கரிப்பை சீர் செய்து பாடசாலை திரும்பினார்.
மாணவர்கள் தமக்குரிய ஒழுக்க விழுமியங்களுடன் நடக்க வேண்டும் எனவும் , பாடசாலை காலம் முடியும் வரை பாடசாலைக்கான ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்துள்ளார்.
அத்துடன் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கரிப்பு தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ,
இது தொடர்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்- திருப்பி அனுப்பிய அதிபர் வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை காலமும் கல்வி விடுமுறையில் நின்று , பாடசாலைக்கு பரீட்சை அனுமதி பெற வித விதமான சிகை அலங்கரிப்புடன் இன்றைய தினம் சென்றுள்ளனர். அவ்வாறு வித்தியசமான சிகை அலங்கரிப்புடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை சிகை அகலங்கரிப்பை சீர் செய்து வருமாறு பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார். உடனேயே பாடசாலைக்கு அருகில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் சிகை அலங்கரிப்பை சீர் செய்து பாடசாலை திரும்பினார். மாணவர்கள் தமக்குரிய ஒழுக்க விழுமியங்களுடன் நடக்க வேண்டும் எனவும் , பாடசாலை காலம் முடியும் வரை பாடசாலைக்கான ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்துள்ளார். அத்துடன் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கரிப்பு தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ,இது தொடர்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.