• May 26 2026

விடுதலை பெறவிருந்த கைதிக்கு ஏற்பட்ட சோகம் - சிறையில் திடீர் மரணம்

Chithra / Jun 13th 2024, 9:49 am
image


பதுளை - தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மட்டக்குளி  பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கைதி  போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும்,

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி விடுதலை பெற இருந்த நிலையிலேயே திடீர் சுகயீனமுற்றுள்ளார்.

இந் நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று   சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில்,

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விடுதலை பெறவிருந்த கைதிக்கு ஏற்பட்ட சோகம் - சிறையில் திடீர் மரணம் பதுளை - தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி  பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைதி  போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும்,கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி விடுதலை பெற இருந்த நிலையிலேயே திடீர் சுகயீனமுற்றுள்ளார்.இந் நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று   சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில்,சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement