• Jul 26 2025

தடுப்புக் காவலில் இருந்த கைதி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு; கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சம்பவம்!

shanuja / Jul 25th 2025, 5:20 pm
image

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  இன்று (25) இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 


குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக  சந்தேக நபர் ஒருவர்  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 


பின்னர் அவர் பொலிஸ்  நிலையத்தின் விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  

இந்த நிலையில் இன்று மதியம் 12.08 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


 கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு வயது (66)  என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவராவார். 


இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்புக் காவலில் இருந்த கைதி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு; கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  இன்று (25) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக  சந்தேக நபர் ஒருவர்  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் அவர் பொலிஸ்  நிலையத்தின் விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  இந்த நிலையில் இன்று மதியம் 12.08 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு வயது (66)  என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவராவார். இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement